search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்ருகன் சின்ஹா"

    காங்கிரசில் இணைந்த சத்ருகன் சின்ஹா, பாராளுமன்ற தேர்தலில் பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #ShatrughanSinha #Congress #PatnaSahib
    புதுடெல்லி:

    சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியின் பாஜக எம்.பி. மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இதையடுத்து கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த வாரம் டெல்லி சென்ற சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரசில் இணைந்தார். 

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளது. இவர் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்துப் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ShatrughanSinha #Congress #PatnaSahib
    பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா, காங்கிரஸில் இன்று இணைந்தார். #ShatrughanSinha #Congress
    புது டெல்லி:

    சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னாசாகிப் தொகுதியின் பாஜக எம்.பி. மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பாஜகவின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் கட்சியின் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகியதாகவும் அறிவித்தார். இது குறித்து கூறுகையில், 'நீண்டகாலம் பணியாற்றிவிட்டு பாஜகவில் இருந்து விலகுவது வலியை தருவதாகத்தான் இருந்தது. ஆனால் பிரபல தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண்சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.



    வாஜ்பாய் காலத்தில் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியில் ஜனநாயகம் உண்மையான உணர்வுடன் இருந்தது. ஆனால் இப்போது ஒரு நபர் ஆட்சி, இரு நபர் படை (பிரதமர் மோடி, அமித்ஷா) என்று தான் இருக்கிறது' என கூறியிருந்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸில் இணைந்தார்.  #ShatrughanSinha #Congress

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘சூழ்நிலைகளின் நாயகன்’ என்றும், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் அவரின் திட்டத்தை ‘நேர்த்தியான யுக்தி’ என்றும் சத்ருகன் சின்ஹா பாராட்டியுள்ளார். #ShatrughanSinha #RahulGandhi
    பாட்னா:

    முன்னாள் நடிகரும், பீகார் மாநிலம் பாட்னா தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா, கட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் தொடர்ந்து பா.ஜ.க. தலைமையிலான அரசை விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ‘சூழ்நிலைகளின் நாயகன்’ என்றும், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் அவரின் திட்டத்தை ‘நேர்த்தியான யுக்தி’ என்றும் பாராட்டியுள்ளார்.



    மேலும், ராகுல் காந்தியின் இந்த திட்டத்தை குறைகூறும் பா.ஜ.க. தலைவர்கள் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளான ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவது மற்றும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி வாய்திறக்க மறுப்பது ஏன் என்றும் கடுமையாக சாடினார். 
    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா தன்னை கட்சியில் நீக்கினால் கவலை இல்லை என தெரிவித்தார். #ShatrughanSinha #MamataBanerjee
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பயிற்சி திடலில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் 22 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வில் உள்ள மோடி அதிருப்தியாளர்களான வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் முன்னாள் நிதி மந்திரியாக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றிய சத்ருகன் சின்ஹா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    இந்த கூட்டத்தில் பேசிய சத்ருகன் சின்ஹா கூறியதாவது:-

    நான் பாரதிய ஜனதா கட்சியில் தான் இருக்கிறேன். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக பாரதத்தின் ஜனநாயகத்துக்காக இங்கு வந்திருக்கிறேன்.

    மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான அரசு அமைந்திருந்தது. தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் நீங்கள் உண்மையை மறைக்க இந்த நாட்டின் காவலாளி திருடனாக மாறிவிட்டதாகதான் மக்கள் பேசுவார்கள்.



    நான் சித்தாந்தங்களுடன் சமரசம் செய்துகொள்ளாவிட்டாலும், உண்மையின் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இங்கு வந்துள்ள எனது மூத்த சகோதரர் யஷ்வந்த் சின்ஹா, இந்த கூட்டத்தில் பங்கேற்றதற்காக என்னை நிச்சயமாக பா.ஜ.க.வில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று குறிப்பிட்டார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.முறை வரிவிதிப்பு போன்றவற்றை சத்ருகன் சின்ஹா தொடர்ந்து எதிர்த்தும், வெளிப்படையாக கருத்து தெரிவித்தும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShatrughanSinha 
    ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #Modi #ShatrughanSinha
    பாட்னா:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.
     
    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 



    இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், பீகாரை சேர்ந்த பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ரபேல் பேரம் விவகாரம் தொடர்பான பிரச்னையில் உண்மை நிலையை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அதன்மூலம் ரபேல் போர் விமானத்தின் விலை மூன்று மடங்கு கூடுதலாக வாங்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து நீங்கள் (பிரதமர் மோடி) வெளிவருவதற்கு நீண்ட நாள்களாகும்.

    மக்கள் என்னை புரட்சிகரமான எம்.பி. என அழைக்கிறார்கள். ஆனால், நான் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காகவே பேசி வருகிறேன்.

    எனவே, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும். இந்த விவகாரத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள நாடு ஆவலாக இருக்கிறது என வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #Modi #ShatrughanSinha
    ×